Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று (23.02.2025) எமது பிரதேச செயலகப் பிரிவின் வல்லைப் பாலத்தின் வடக்குப் பக்கமாக வல்லை நீரேரியின் கரையோரப் பகுதியில் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் தலைமையில் "அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" எனும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்கள் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக உரையாற்றினார்.இதன்போது பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.














