சர்வதேச சிறுவர் முதியோர் தினமானது வெள்ளிக்கிழமை (7.11. 2025 )அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சிவலிங்கம் சத்தியசீலன் (ஓய்வு நிலை மேலதிக பணிப்பாளர் நாயகம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. இராசலிங்கம் சத்தியலிங்கம் ( ஓய்வு நிலை சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் முதியோர்களுக்கு அன்பளிப்புகளும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு திருமதி. செந்தூரன் பாமினி (உளவளத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களினால் "மகிழ்ச்சியான இளமையும், முதுமையும்" எனும் தலைப்பில் சிறப்பான விழிப்புணர்வு உரை ஆற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 7eldersd1 7eldersd2 7eldersd3 7eldersd4

Scroll To Top