இனிய புத்தாண்டினை வரவேற்று 2026 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வாக எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எமது நாட்டிற்காக தம் இன்னுயிரை நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து எமது நாட்டிற்கான சேவையினை அர்ப்பணிப்போடு திறன்பட செய்யும் முகமாக அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் எமது பிரதேச செயலாளரின் வாழ்த்துரைகளோடு அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றதனை தொடர்ந்து இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024ஆம் ஆண்டிற்கான குறித்த இலக்கை அடைந்தமைக்கான தேசிய மட்ட விருது நிகழ்வின் மெச்சுரை சான்றிதழ்களும் ,பதக்கங்களும் மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு இதய அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமைக்கான ஐனாதிபதி நிதியத்தின் உதவித்தொகையாக ரூபாய் 250,000 காசோலை பயனாளி ஒருவருக்கு எமது பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.
இறுதியில் நலன்புரிச்சங்க கடந்த வருட கணக்கறிக்கை காட்சிப்படுத்தப்பட்டதோடு நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கு மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.














