கரவெட்டி பிரதேச செயலக மாதிரிக்கிராமத் தெரிவில் உள்ள J/363 கரவெட்டி மேற்கு கிராமத்தின் மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (27.03.2026) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கரவெட்டி மேற்கு மகளிர் விவகாரக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கிராம மட்டத்திலான பெண்களின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நெல்லியடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி ம.விஜயந்தி அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்தோடு, கௌரவ விருந்தினர்களாக கிராம மட்ட உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், சிறுவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட சிறுவர்களுக்கும் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.














