சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,மாகாண தொழில் துறை திணைக்களம் மற்றும்சிறு தொழில் முயற்சி பிரிவு ஆகிய திணைக்களங்களின் கூட்டு முயற்சியானது, அடிமட்டத்திலுள்ள சிறு உற்பத்தியாளர்களுக்கு ஒரு முறையான சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.கண்காட்சியில் பாரம்பரிய மற்றும் நவீன நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.குறிப்பாக பாரம்பரிய கைவினைப் பொருள்கள் ,பனை உற்பத்திகள்,உள்ளூர் உணவுப்பொருட்கள்,புத்தாண்டுக்கே உரிய பலகாரங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டஉணவுப்பொதிகள்,கைத்தறி ஆடைகள் மற்றும் தையல் கலை மூலம் உருவாக்கப்பட்ட ஆடைகள்,சுயதொழில் உற்பத்திகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.














