கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு உடல் ஆரோக்கிய நிகழ்வுகள் 27.10.2025 அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு.க.கனகராஜா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.இந் நிகழ்ச்சி திட்டமானது விளையாட்டு அமைச்சின் அனுசரணையுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் (PSDG வேலைத்திட்டத்தின் கீழ்) யாழ் மாவட்ட செயலக வட மாகாண விளையாட்டு பிரிவினூடாக நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை.
இவ் பயிற்சி முகாமானது கரவெட்டி மற்றும் பருத்தித்துறை வீர வீராங்கனைகளுக்கு கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் உள்ள யா/விக்னேஸ்வரா கல்லூரியில் 26.10.2025 அன்று நடைபெற்றது.

நலன்புரி நன்மைகள் கட்டம் ஒன்றின் தகவல்களை ஆண்டுதோறும் மீள் உறுதிப்படுத்தும் (Recertification) செயற்பாடு தொடர்பான எண்ணக்கரு மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை (Conceptual & Technical Approach) தொடர்பான பயிற்சி மற்றும் செயல்முறை ரீதியான விளக்கம் 23.10.2025 ம் தினத்தன்று கரவெட்டி பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் (நிர்வாகம்) திரு.எந்திரி ராஜசுரேஸ் அவர்களால் கரவெட்டி, கோப்பாய், பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளும், விளக்கங்களும் வழங்கப்பட்டன.

2019.4.12 -2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டியில் உதவிப் பிரதேச செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்ற நாள் முதல் இடமாற்றம் பெற்றுச்செல்லும் காலம் வரை கரவெட்டி பிரதேச மக்களுக்கு சிறப்பான சேவைகளை பல வழிகளிலும் ஆற்றியுள்ளார்.
நீங்கள் சேவை காலங்களில் அளித்த அர்ப்பணிப்பும்,நேர்மையும் மற்றும் சீரான நிர்வாகச் சேவையும் எங்களது உள்ளங்களை நெகிழச் செய்தவை உங்கள் ஒவ்வொரு முடிவிலும் மக்களின் நலனை முன்னிறுத்தும் பண்பும், ஈடுபாடும் தெளிவாக காணப்பட்டமை உங்கள் சிறப்பான ஆளுமையின் வெளிப்பாடாகும்.உதவிப் பிரதேச செயலாளராக மட்டுமன்றி பனை அபிவிருத்தி சபையில் பொது முகாமையாளராக(பதில்) ஆறுமாதகாலமாக தனது சிறப்பான சேவையை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

"சிறந்தபலம்,சுகாதாரம் மற்றும் தைரியம் கொண்ட வாழ்வு"எனும் தொனிப்பொருளில் தேசிய ஓய்வூதியர் தினமானது இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.இதற்கு அமைவாக அரசசேவைக்காக பல்வேறு துறைகள் மூலம் பெரும்சேவை ஒன்றை நிறைவேற்றிய சிரேஷ்ட பிரஜைகளின் பங்களிப்பினை நினைவூட்டும் விதமாக திரு.வே.சிவசிதம்பரம் (தலைவர், ஓய்வூதிய நம்பிக்கை நிதியம்.) அவர்கள் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஓய்வூதிய தினம் 22.10.2025 இன்று கொண்டாடப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக கரவெட்டி பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. சிவகாமி உமாகாந்தன், கணக்காளர் திரு.க.சுதர்சன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நி.கிருஷ்ணாளினி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Scroll To Top