போதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கடந்த 2019.06.23   ஆந் திகதி உடுப்பிட்டி சந்தி, பைங்கூரன் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டது. இதன் பதிவுகள் சில ..............

 Drugs 5  Drugs 7 Drugs 6 
Drugs 4 Drugs 3 Drugs 1
புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம் 2019/06/05 ஆந் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 
 
sam5

 

sam4 

sam1 
sam2  sam3
 

கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் வதியும் பிறப்பு பதிவற்ற சிறுவர்களுக்கான விசேட நடமாடும் சேவையொன்று 2019.05.14 ஆந் திகதி கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிறப்புப் பதிவற்ற சிறார்களுக்கான 17 காலம் கடந்த பிறப்புப் பதிவுகளும் ஒரு உத்தேச வயது சான்றிதழும் இரண்டு திருமணப் பதிவுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

 ms 1ms 2

ms 3ms 4

வரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம் 04/06/2019 செவ்வாய்க்கிழமை பிப 1.30 மணிக்கு கரணவாய் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலர் திரு.ஈ.தயாரூபன்,பிரதித் திட்டப் பணிப்பாளர் திருமதி.ர.ரகுநாதன், திட்ட இணைப்பாளர் திரு.ஏ.எம். ராஜ்குமார், நிர்வாக கிராம அலுவலர் திரு.கி.ரவிக்குமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி இணைப்பாளர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதிகளான கெளரவ பிரதேச சபை உறுப்பினர் திரு க.வைத்தியநாதன் மற்றும் திரு.எஸ்.தமிழினியன், கரணவாய் வட்டார தலைவர் திரு.க.இரத்தினம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.சாந்திகுமார், கிராம அலுவலர் திரு.பா.வைகுந்தன், கரணவாய் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ம.புஸ்பலோஜினி, சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.பு. சிவதர்சினி, பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.ப.சதீஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அயல் கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கரணவாய் பிரிவை சேர்ந்த150 ற்கும் அதிகமான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட பொது மக்கள் ஏழு குழுக்களாக பிரிந்து கிராமத்தின் வரைபடம், வரலாறு, கிராமத்தின் குறுக்கே நடத்தல், தேவைப் பகுப்பாய்வு, பருவகால நாட்காட்டி, மக்களின் செல்வ விபரம், மக்கள் சேவை பெறும் நிறுவனங்கள் போன்ற விடயங்களை ஆர்வத்துடன் தயாரித்தனர். கூட்டத்தில் மேலும் உட்கட்டமைப்பு நிதியில் முதற்கட்டமாக இரண்டு விவசாயக் கிணறுகளை திருத்துவதனூடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க முடியும் என்றும் ஆற்றல் விருத்தி நிதியில் களான் வளர்ப்பு, திரவச் சவர்க்காரம் தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு,கணணிப் பயிற்சி போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 gr2  gr5  gr 1
 gr4  gr3
 

கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ் மாவட்ட கருத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 2019.05.28 ஆந் திகதி கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கிராம சக்தியின் தலைவர் மற்றும் செயலாளர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் முன்னாள் விவசாய பிரதி அமைச்சராக செயற்பட்ட காலபகுதி ஒதுக்கீட்டு நிதியிலிருந்து 11 விவசாய பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 GRAMA 2  GRAMA 6

 

GRAMA 4 

GRAMA 1 GRAMA 5

News & Events

25
Jun2019
விழிப்புணர்வு நாடகம்

விழிப்புணர்வு நாடகம்

போதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று...

07
Jun2019
புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ்...

31
May2019
காலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை

காலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை

கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில்...

31
May2019
கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ்...

24
May2019
இலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினம் - 2019

இலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினம் - 2019

இலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த...

13
May2019
அரச அலுவலர்களுக்கான கலைப்போட்டிகள் - 2019

அரச அலுவலர்களுக்கான கலைப்போட்டிகள் - 2019

கடந்த 2019.05.12 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாழ்...

08
May2019
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு

ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தில் இன்று 2019.05.08 ஆந் திகதி...

02
May2019
சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்

சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்

வடமாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் நிதியினுாடாக மாற்றாற்றல் உடையோருக்கான...

29
Apr2019
 'FANI' Cyclonic Storm

'FANI' Cyclonic Storm

Weather Forecast About 'FANI' Cyclonic Storm  

10
Apr2019
பிரதேச விளையாட்டு விழா 2019

பிரதேச விளையாட்டு விழா 2019

பிரதேச விளையாட்டு விழா 2019

13
Mar2019
பதிவாளர் நாயக திணைக்களத்தின் தேசிய வைபவம்

பதிவாளர் நாயக திணைக்களத்தின் தேசிய வைபவம்

பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின்...

15
Feb2019
பிரதேசமட்ட விளையாட்டு விழா

பிரதேசமட்ட விளையாட்டு விழா

2019 ஆம் ஆண்டிற்கான பிரதேசமட்ட விளையாட்டு விழாவிற்கான சதுரங்கப்...

Scroll To Top