மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய தொழிற்சந்தை (Job Fair) நிகழ்வு (14.05.2026) வியாழக்கிழமை கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இளைஞர், யுவதிகளின் எதிர்கால மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்,தனியார் துறை வேலை வாய்ப்புகள்,தொழிற்கல்வி மற்றும் சுயதொழில் தொடர்பான விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன .
மேலும் தொழிற்சந்தையில் பல்வேறு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான இளைஞர் , யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகளையும் வழிகாட்டல்களையும் முன்னெடுத்தன.இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற இளைஞர், யுவதிகள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமக்கான வேலைவாய்ப்பு , உயர் கல்வி வாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது














