மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய தொழிற்சந்தை (Job Fair) நிகழ்வு (14.05.2026) வியாழக்கிழமை கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.​இளைஞர், யுவதிகளின் எதிர்கால மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் ​உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்,​தனியார் துறை வேலை வாய்ப்புகள்,​தொழிற்கல்வி மற்றும் சுயதொழில் தொடர்பான விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன .

 ​மேலும் தொழிற்சந்தையில் பல்வேறு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான இளைஞர் , யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகளையும் வழிகாட்டல்களையும் முன்னெடுத்தன.​இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற இளைஞர், யுவதிகள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமக்கான வேலைவாய்ப்பு , உயர் கல்வி வாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது

 
14youth1 14youth2 14youth3
14youth4 14youth5 14youth6
Scroll To Top