05.06.2026
கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயிற்சி நெறி.இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், அரச சேவைகளை மேலும் திறன்படவும் விரைவாகவும் மக்களுக்கு வழங்குவதில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பங்களிப்பு இன்றியமையாததாகி வருகிறது.
அந்த வகையில், கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி நெறி வெள்ளிக்கிழமை (05.06.2026)அன்று நடாத்தப்பட்டது.இப்பயிற்சி நெறியினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை சார்ந்த விரிவுரையாளர்கள் Dr. E.Y. Andrew Charles (Senior Lecturer, University of Jaffna)Dr. Nirthika Rajendran (Lecturer, University of Jaffna) இருவரும் தமது அறிவையும் அனுபவத்தையும் மிக எளிமையாகப் பகிர்ந்துகொண்டு சிறப்பான ஒரு செயலமர்வினை நடாத்தியமை உத்தியோகத்தர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

02.06.2026
தற்கால டிஜிட்டல் உலகில் அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு சவால்களிலிருந்து அரசு உத்தியோகத்தர்களைப் பாதுகாக்கும் நோக்கில், கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சைபர் பாதுகாப்பு (Cyber Security) விழிப்புணர்வு நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (02.06.2026) அன்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் (Jaffna Technical College) Cyber Security துறையில் பயிலும் மாணவர்கள் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தினை சிறப்பாக நடாத்தினர்.இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் அரச திணைக்களங்களின் கணினிக் கட்டமைப்பு மற்றும் தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

11.12.2025
எமது கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சேவையினை மேம்படுத்தும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி நெறி இடம்பெற்றது.இப் பயிற்சி நெறிக்கு வளவாளராக திரு.ம. மகிம்ஷன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் மாவட்ட செயலகம்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12.11.2025
உற்பத்தித்திறன் தொடர்பான பயிற்சி நெறியானது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.இவ் பயிற்சி நெறிக்கு வளவாளராக திரு.R.றொபின் ஜெயறூபன் (உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்,மாவட்டச் செயலகம் மன்னார்) அவர்கள் கலந்து சிறப்பான பயிற்சினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
17.10.2025
கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி வன்பொருள் தொடர்பான பயிற்சி நெறி 17.10.2025 ,21.10.2025 ஆகிய இரு தினங்களும் நடைபெற்றது.இவ் பயிற்சி நெறியானது எமது பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவ் பயிற்சி நெறிக்கு வளவாளராக மாவட்ட செயலக உத்தியோகத்தர் திரு.கி.தர்ஷன் அவர்கள் கலந்து வன்பொருள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு சேவை நேரத்தில் ஏற்படும் இடர்பாடுகளை கையாள்வது தொடர்பான விளக்கங்களை சிறப்பாக தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
19.06.2025
எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் தலைமையில் Procurement தொடர்பான பயிற்சிநெறி நடைபெற்றது. இப் பயிற்சிநெறிக்கு வளவாளராக திரு. T.ராஜீவன் அவர்கள் (கணக்காளர் , பிரதம செயலாளர் அலுவலகம் , வடக்கு மாகாணம்) கலந்துகொண்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
17.06.2025
எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நேர முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றது.இதில் வளவாளராக திரு.ந.உமாகாந் (சிரேஷ்ட விரிவுரையாளர் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் )அவர்கள் கலந்து கொண்டார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
03.06.2025
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பசுமை உற்பத்தித்திறன் (GREEN PRODUCTIVITY) தொடர்பான செயலமர்வு பிரதேச செயலாளர் திருமதி.ம.உமாமகள் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.வளவாளராக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பா.ஸ்ரீபவன் (மாவட்டச் செயலகம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
02.04.2025
எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தரவட்டம் (Quality Circle) தொடர்பான செயலமர்வு நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றது.இதில் வளவாளராக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இ.பொன்னம்பலம் (பிரதேச செயலகம்,கோப்பாய்) அவர்கள் கலந்து கொண்டார்.













