புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நேரலை உரை காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் அனைவரும் "Clean Sri Lanka " திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு" clean Sri Lanka" வேலைத்திட்டம் பற்றிய கருத்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.தொடர்ந்து பதவிநிலை உத்தியோகத்தர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.இறுதியாக 2024 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட இலக்குகளை பூர்த்தி செய்து பிரதேச மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகள் வழங்கப்பட்டதுடன் கிராம அலுவலர்களுக்கான தினக்குறிப்பு பதிவேடுகளும் வழங்கப்பட்டன.














