மாவட்ட மட்ட முதியோர் தின விழாவானது புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலத்தில் 14.10.2025 ஆம் திகதியன்று யாழ் மாவட்ட சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சு.வரதபாஸ்கரன் தலைமையில் நடாத்தப்பட்டது.
இவ் விழாவில் முதியோர்களுக்கான பொது அறிவு, தனிப்பாடல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் கரவெட்டி பிரதேச பிரிவிலிருந்து பங்கு பற்றிய எட்டு மூத்த பிரஜைகளில் ஐந்து பேர் பரிசில்களை பெற்றுக் கொண்டமை பாராட்டத்தக்கது.













