நெல்லியடி மற்றும் துன்னாலை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளின் புதிய கட்டடங்களின் திறப்பு விழாவும், கரவெட்டி சமுர்த்தி ஆரோக்கிய உணவகத்தின் திறப்பு விழாவும் இன்று (06.02.2026) வெள்ளிக்கிழமை கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரும்,கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ.ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் -குறுநிதி திரு. T. மகேஷ் பெர்ணான்டோ, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) திரு. M.G.S.S. கீத்சிறி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும், “சிப்தொர” புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கலும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் பிரதேச மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
6bankopn1 6bankopen8 6bankopen9
 
6bankopen1 6bankopen2 6bankopen3
 
6bankopen4 6bankopen7 6bankopen5
 
Scroll To Top