கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், தொழில் கல்வி வழங்கும் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு (NVQ) செயற்திட்டம் . இச் செயற்திட்டமானது செவ்வாய்க்கிழமை( 24.02.2026) நெல்லியடி நகர் பகுதியில் நடைபெற்றது.
இச்செயற்திட்டத்தின் போது NVQ தகுதி முறையின் முக்கியத்துவம், பல்வேறு தொழில் துறைகளில் கிடைக்கும் பயிற்சிகள், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களின் பயன்கள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி தொழில் உலகில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

மேலும், தொழில் கல்வி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது பாடத்திட்டங்கள் நடைமுறைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரங்கள் குறித்து விளக்கினர். கலந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கங்கள் பெற்றனர்.இந்நிகழ்வு, பிரதேச இளைஞர்,யுவதிகளை தொழில்முனைவுத்திறன் மற்றும் திறன் மேம்பாட்டின் வழி நிலையான வாழ்வாதாரத்துக்கு வழிநடத்தும் முக்கிய முயற்சியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

24skill1 24skill2 24skill3

24skill4 24skill5 24skill6

 
Scroll To Top