கரவெட்டி பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் மாதாந்த சந்தை இன்று (25.05.2026) திங்கட்கிழமை நடைபெற்றது.உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும் நடாத்தப்படும் மாதாந்த சந்தை இன்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிராமிய மட்டத்தில் பெண்களினாலும், சுயதொழில் முயற்சியாளர்களினாலும் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், நவதானிய உணவு வகைகள் ,உள்ளூர் மசாலாப் பொருட்கள்,நஞ்சற்ற காய்கறிகள், கீரை வகைகள் என்பன விற்பனை செய்யப்பட்டன.
பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சந்தைக்கு வருகை தந்து, பொருட்களைக் கொள்வனவு செய்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குத் தங்களின் ஆதரவை வழங்கினார்கள்.இந் நிகழ்வானது ப்ரண்ட்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.













