கரவெட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ஜெயச்சந்திரன் றஜீவன் அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர் பிரதிநிதிகள் ,கிராம அலுவலர்கள் ,பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் பிரதேச வைத்திய அதிகாரி, மின்சார சபை உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலீஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேசத்தின் நடப்புக்கால அபிவிருத்திப் பணிகள், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், துறைசார் அதிகாரிகளினால் பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன














