Related Links
මුල් පිටුව
வீட்டுத்தோட்டம் தொடர்பான வேலைத்திட்டம்

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
அதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 0.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும் .எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம், யாழ்ப்பாணம் அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்.
1. சாவகச்சேரி - 0779231738
2. கைதடி - 0778205566
3. நல்லூர் - 0773446026
4. வேலணை - 0776628336
5. புங்குடுதீவு - 0776578125
6. தொல்புரம் - 0777647477
7. கீரிமலை - 0775841254
8. உடுவில் - 0774135082
9. புத்தூர் - 0703503909
10. உரும்பிராய் - 0779489650
11. புலோலி - 0774004554
12. அம்பன் - 0778075510
13. காரைநகர் - 0779055960
14. சண்டிலிப்பாய் - 0773688410
15. கரவெட்டி - 0779078020
16. மாவட்ட அலுவலகம் - 0703503900
.
முக்கிய அறிவித்தல்
கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 விழிப்புணர்வு தொடர்பான முக்கிய அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 ) காரணமாக கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு சேவையைப் பெற வருவோரும் சேவையை வழங்க வருவோரும் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1. இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டைவலி மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள் அலுவலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்கவும்.
2. அத்தியாவசியத் தேவை இருப்பின் மட்டும் அலுவலகத்திற்கு வருகை தரவும்.
3. பொது மக்களாகிய நீங்கள் ஒரு அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு ஒருவர் மட்டும் வருகை தரவும்.
4. முகக்கவசம் (Mask) அணிந்து வருகை தரவும்.
5. அலுவலக வாயிலிலுள்ள நீர்க்குழாயில் உங்கள் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டு கழுவிய பின் உள் நுழையவும்.
6. கூட்டமாகக் கூடியிருப்பதைத் தவிர்த்து இருவருக்கிடையில் குறைந்தது 1m தூர இடைவெளியைப் பேணிக் கொள்ளவும்.
7. இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாயினையும் மூக்கினையும் கைக்குட்டையினால் / ரிசுக்கடதாசி ஒன்றினால் /முழங்கையினால் மூடிக்கொள்ளவும்.
“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்
“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டமானது மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்பட்டு யாழ்மாவட்டத்தில் கடந்த 23.08.2019 ஆந் திகதியிலிருந்து 2019.08.30 ஆந் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக ரூபா 3,323,096.24 செலவிடப்பட்டு 364 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்செயற்திட்டத்தின் கீழ் கிராம சக்தி தேசிய வேலைத்திட்டம் , தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம், சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்,தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்,தேசிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்,தேசிய சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டம்,தேசிய பிள்ளைகளை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டம்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தொடர்பிலான வலுவூட்டல் தேசிய நிகழ்ச்சித்திட்டம், நிலைபேறான பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டம், ஸ்மாட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், மரநடுகைத்திட்டம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித்திட்டம், தகவலறியும் சட்டம் உள்ளடங்கலாக பல விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான பதிவுகள் சில
















வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வு
கடந்த 2019.08.16 ஆந் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் சந்தனந்தறை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டமானது மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வின் பதிவுகள் சில...





























