Related Links
முகப்பு
வரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
காலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை
கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் வதியும் பிறப்பு பதிவற்ற சிறுவர்களுக்கான விசேட நடமாடும் சேவையொன்று 2019.05.14 ஆந் திகதி கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிறப்புப் பதிவற்ற சிறார்களுக்கான 17 காலம் கடந்த பிறப்புப் பதிவுகளும் ஒரு உத்தேச வயது சான்றிதழும் இரண்டு திருமணப் பதிவுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.




கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ் மாவட்ட கருத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 2019.05.28 ஆந் திகதி கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கிராம சக்தியின் தலைவர் மற்றும் செயலாளர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் முன்னாள் விவசாய பிரதி அமைச்சராக செயற்பட்ட காலபகுதி ஒதுக்கீட்டு நிதியிலிருந்து 11 விவசாய பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு
எமது பிரதேச செயலகத்தில் இன்று 2019.05.08 ஆந் திகதி காலை 10.00 மணிக்கு கடந்த 21 அந் திகதி ஈஸ்ரர் திருநாளிலன்று நடைபெற்ற பாரிய துயரச் சம்பவத்தில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் காயமடைந்து மற்றும் மனஅழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் உறவுகள் அதிலிருந்து மீள்வதற்கு இறைவனிடம் வேண்டிப் பிரார்த்தனை நிகழ்வும் மதகுருக்களின் முன்னிலையில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது












































