எமது நோக்கு

நிலைபேறான அபிவிருத்திக்கான தூய்மையான மக்கள் சேவை

எமது கொள்கை

தேசிய நோக்கினை அடைவதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நேர்மையானதும் சூழல் நேயமான சேவைகளினூடாக மக்களின் அபிலாசைகளை  பூர்த்தி செய்வதன் மூலம் வாழ்க்கைத்  தரத்தை மேம்படுத்தி நிலைபேறான பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்துதல்

கரவெட்டி பிரதேச செயலகத்தின் வரலாறு


யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியினுடைய தெற்கு மேற்கு பிரதேசமானது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளது. இவ் அலுவலகமானது யாழ் நகரிலிருந்து  29 KM துாரத்தில் யாழ் - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசமானது 63.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவினை உள்ளடக்கியுள்ளதுடன் 2.2 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பினையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் இப்பிரதேச செயலகப் பிரிவானது 35 கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 195 கிராமங்களையும் கொண்டுள்ளது. வடமராட்சிப் பிரிவானது முன்னர் ஒரு தனியான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. பின்னர் அடுத்தடுத்த வரம்புபடுத்தல் மற்றும் தேர்தல் தொகுதிவாரியாக நிர்வாக நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக 1960 இல் பருத்தித்துறை தேர்தல் தொகுதியிலிருந்து உடுப்பிட்டி தேர்தல் தொகுதியானது பிரிக்கப்பட்டதன் காரணமாக கரவெட்டி உதவி அரசாங்க பிரிவு உருவாகியது. பின்னர் அரச கொள்கை மாற்றத்திற்கமைவாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட வடமராட்சி தெற்கு மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு கரவெட்டி பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது.

 

பிரதேச செயலாளர்களாக கடமையாற்றியோர்

பெயர் இருந்து வரை
திரு.எ.ஐயாத்துரை 1992
திரு.எ.ஸ்ரீனிவாசன் 1992 2002
திரு.க.கனகரத்தினம் 2002 2004
திரு.சி.சத்தியசீலன் 2004 1996
திரு.இ.வரதீஸ்வரன் 2012.01.04 2012.06.22
திரு.ச.சிவஸ்ரீ 2012.07.23 2017.05.08
திரு.க.ஸ்ரீமோகனன் 2017.05.08 2018.03.05
திரு.ஈ.தயாரூபன் 2018.03.12  2025.02.10
திருமதி. ம.உமாமகள்  2025.02.10 இன்றுவரை

குடியுரிமை சாசனம்

Scroll To Top