மாதகலில் வந்துதித்த - மாதரசி
கரவையம்பதியில் கண்ணாளனைக் கரம்பிடித்து,
ஆறு குழந்தைகளுடன் அன்பான வாழ்வமைத்து,
நூறு வயதுவரை வாழ்ந்திட்ட திருமதி செல்லக்கண்டு
சித்திரை முப்பதில் இப்புவியில் வந்துதித்து
முத்திரை பதித்திட்ட வீரப் பெண்மணி.
கரிசனையான மனைவியாய், கண்ணான அன்னையாய்
கரணவாயில் வாழ்ந்துவரும் கண்மணி
கனிவான தாயே நீர்,மென்மேலும் வாழ்ந்திடவே,
கரவெட்டி பிரதேச செயலகமும் களிப்புடனே வாழ்த்துகின்றது.
நோய் நொடிகளின்றி நீண்டகாலம் வாழ்ந்திடவே,
நாங்கள் எல்லாம் வாழ்த்துகின்றோம்.
வாழிய வாழிய பல்லாண்டு.
100years1
 
100years2
 
வாழ்த்துவோர்
பிரதேச செயலாளர்,
அனைத்து உத்தியோகத்தர்கள்
பிரதேச செயலகம்,
கரவெட்டி .

குடியுரிமை சாசனம்

Scroll To Top