"சிறந்தபலம்,சுகாதாரம் மற்றும் தைரியம் கொண்ட வாழ்வு"எனும் தொனிப்பொருளில் தேசிய ஓய்வூதியர் தினமானது இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.இதற்கு அமைவாக அரசசேவைக்காக பல்வேறு துறைகள் மூலம் பெரும்சேவை ஒன்றை நிறைவேற்றிய சிரேஷ்ட பிரஜைகளின் பங்களிப்பினை நினைவூட்டும் விதமாக திரு.வே.சிவசிதம்பரம் (தலைவர், ஓய்வூதிய நம்பிக்கை நிதியம்.) அவர்கள் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஓய்வூதிய தினம் 22.10.2025 இன்று கொண்டாடப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக கரவெட்டி பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. சிவகாமி உமாகாந்தன், கணக்காளர் திரு.க.சுதர்சன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நி.கிருஷ்ணாளினி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் Dr. க.சிவசுதன் அவர்கள் கலந்து கொண்டு ஓய்வூதியரின் உடல்நலம் மற்றும் உளநலம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய முக்கியம் பற்றியும் அவர்களது குடும்பத்தில் நல்லுறவைப் பேணுதல், சமூகத் தொண்டுகள், அவர்களுக்கு தேவையான அன்பு,ஆதரவை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான விளக்கங்களையும் அவர்களது சுய மதிப்பை மெருகூட்டுவதற்கான செயல்பாடுகளையும் தன்னம்பிக்கைகளையும் பற்றி சிறப்பான ஆலோசனைகளை வழங்கியதோடு ஓய்வூதியர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் கேள்விகள் என்பவற்றை கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

அத்தோடு எமது பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோர்கள் ஓய்வூதியர்களின் சேவையை பாராட்டியும் அவர்களது நலன் கருதியும் சிறப்பான உரையை ஆற்றி இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வில் எமது உதவி பிரதேச செயலாளர் திருமதி. சிவகாமி உமாகாந்தன் அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்வதனை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் முகமாக கரவெட்டி பிரதேச செயலக ஓய்வூதியர்கள் சார்பில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தமக்கு வழங்கிய சேவைகளிற்கு நன்றி கூறியதோடு மட்டுமன்றி வாழ்த்து செய்திகளை வழங்கி மகிழ்வடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் நடனம்,கூத்து ,ஓய்வூதியர்களின் அனுபவப் பகிர்வுகள் போன்ற விடயங்களும் இடம்பெற்றன.
 
22pensday1 22pensday2 22pensday3 22pensday4

குடியுரிமை சாசனம்

Scroll To Top