29.05.2023 தொடக்கம் 20.11.2025 வரையான காலப்பகுதியில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய மதிப்பிற்குரிய திரு.பாலசுப்பிரமணியம் மேகவண்ணன் அவர்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார். அவருடைய அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி வாழ்த்துவதில் கரவெட்டி பிரதேச செயலகம் பெருமை கொள்கிறது.
எமது நிர்வாக உத்தியோகத்தர் அவர்களது அர்ப்பணிப்பும், நேர்த்தியான நிர்வாக திறமையினையும் உணர்வு நிறைந்த சேவையினையும் நாங்கள் மனமார பாராட்டுகின்றோம். உங்களது சிறப்பான பங்களிப்பு எமது அலுவலகத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு பேராதரவாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்களது பணி ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்குவித்து நல்ல நிர்வாகத்தின் அருமை என்ன என்பதை உணரச் செய்துள்ளது. எங்கள் அன்பும் வாழ்த்துக்களும் என்றும் உங்களுடன் இருக்கும் என்பதோடு உங்கள் சேவை மேலும் தொடர நாம் வாழ்த்தி நிற்கின்றோம்

20Aofarewell1 20Aofarewell2 20Aofarewell3

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top