கரவெட்டி பிரதேச செயலகத்தில் 29.12.2025 (திங்கட்கிழமை) அன்று பிரஜா சக்தி தேசிய நிகழ்ச்சி திட்டம் எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் வளவாளராக கரவெட்டி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நி.கிருஷ்ணாலினி அவர்கள் கலந்து கொண்டு பயனளிக்கும் வழிகாட்டல்களை வழங்கினார்.
மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெ. ரஜீவன் அவர்கள் கலந்து கொண்டு சமூக அபிவிருத்தி சபை குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி, நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வு, வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்படுவோருக்கான தெளிவு, ஊக்கம் மற்றும் செயற்பாட்டு விளக்கத்தைக் கொண்டிருந்த ஒரு முக்கியமான வழிகாட்டல் நிகழ்வாக இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

29prajashakthi1 29prajashakthi2 29prajashakthi3

29prajashakthi4 29prajashakthi5 29prajashakthi6

 
 

குடியுரிமை சாசனம்

Scroll To Top