கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் விவசாய அபிவிருத்தி தொடர்பான பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் புதன்கிழமை (17.02.2026) அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது ​எமது உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கௌரவ தவிசாளர் வடமராட்சி தெற்கு மேற்குபிரதேச சபை (கரவெட்டி) , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர்களுடன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய போதனாசிரியர் ​நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் ,​பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ,​அரசு கால்நடைத் திணைக்கள உத்தியோகத்தர் ,​கிராம அலுவலர்கள்,​விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புபட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .

​இக்கூட்டத்தில் பிரதேச விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.​சட்டவிரோத பன்றிப் பண்ணைகள்,​கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம்,​கழிவகற்றல் மேலாண்மை,பயிர்காப்புறுதி போன்ற விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

17agrimeet1

குடியுரிமை சாசனம்

Scroll To Top