உற்பத்தி திறன் செயலகத்தால்  நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index _ 1.0 போட்டியில் எமது பிரதேச செயலகம்,மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடமும்  (2/15)அகில இலங்கை ரீதியில் இருபத்தெட்டாம்  (28/340) இடமும் பெற்றுள்ளது. விசேடமாக இதில் 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இது அரச பொறிமுறையில் முன்னணி வகிக்கும் சேவை வழங்கல் வலையமைப்பு, பிரதேச செயலகங்களின் உற்பத்தித்திறனை அளவீடு செய்வதற்கும் , மதிப்பீடு செய்வதற்கும் மக்களை மையப்படுத்திய நிர்வாகம் (Citizen Mirror)  பிரதேச உற்பத்தி்த்திறன் சுட்டெண் 1.0 தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரகாரம் நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு,பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்திட்டம் எனும் ஏழு பிரிவு ரீதியான தரவுகளை உள்ளிட்டு அகில இலங்கை ரீதியில் 87.17%  புள்ளிகளைப் பெற்று  AAA  தரத்திற்கு  கரவெட்டி பிரதேச செயலகம் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று கொழும்பு Galle Face Hotel இல் நடைபெற்றது. சான்றிதழை மதிப்பிற்குரிய  பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்களும், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி சுரேகா கிட்டினப்பிள்ளை அவர்களும் பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

16cmirror1 16cmirror3

16cmirror2

குடியுரிமை சாசனம்

Scroll To Top