நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கரவெட்டி பிரதேச செயலக சிறுவர் பிரிவினரால், உலக சிறுவர் தேசிய நிகழ்ச்சித்திட்ட Clean Srilanka தொடர்பான கருத்தமர்வானது 18.11.2025 அன்று கரவெட்டி மத்தி கவுந்தில் முன்பள்ளியில் J/367 கரவெட்டி மத்தி, J/368 கரவெட்டி கிழக்கு, J/369 கட்டைவேலி ஆகிய பிரிவு சிறுவர்களை இணைத்து நடாத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு கரவெட்டி பிரதேச செயலாளர் சார்பில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கலந்து நிகழ்வு தொடர்பான கருத்துரையினை முன்வைத்து, நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

வளவாளர்களாக CRPA திரு.க.கதிர்செல்வன், திறன் விருத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.த. தர்மசிறி, உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி. செ.பாமினி , CCH NGO திரு.வி.ரொபின் ஆகியோருடன், செயலக NCPA, WDO, பிரிவு கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் கிளை உத்தியோகத்தர்கள், போதை தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதுடன், சிறுவர்களை மகிழ்வூட்டும் விளையாட்டுகளும் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு ஆக்கபூர்வமாக சிறுவர்களின் பங்பற்றுதல்களுடன் முன்னெடுத்து செல்லப்பட்டது.

18cleansl1 18cleansl2 18cleansl3 18cleansl4

Scroll To Top