மனித வேலைவாய்ப்பு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில், கரவெட்டி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)" தொடர்பான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிநெறி கடந்த 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரு தினங்களும் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், கரவெட்டி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நவீன தொழில்நுட்ப உலகிற்கு அவசியமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள், ஆன்லைன் வணிக மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இப்பயிற்சிநெறியில் பங்குபற்றுனர்களுக்கு விரிவான விளக்கங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பின் இறுதி நாளான 09.07.2026 அன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களை, கரவெட்டி உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .
இப்பயிற்சிநெறியானது பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் தொழில்முனைவோரின் டிஜிட்டல் சார் வாழ்வாதார மேம்பாட்டிற்குப் பெருமளவில் பங்களிப்பு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது .














