கரவெட்டி பிரதேச செயலகத்தில் ​வரவிருக்கும் 5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கு 30.07.2026 (வியாழக்கிழமை ) அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.​சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன.​இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்ட ஆசிரியர் திரு. பா. யசிதரன் அவர்கள், மாணவர்கள் பரீட்சையை மிக இலகுவாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான சிறந்த உத்திகளையும், நுண்ணறிவு சார்ந்த வழிகாட்டல்களையும் தெளிவுபடக் கற்பித்தார்.​மேலும், மாணவர்களின் அடைவு மட்டத்தைக் கண்டறியும் வகையில் மாதிரிப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டது. அதில் ​முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குக் காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.​சிறப்புப் புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களுக்குச் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.​நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துச் செய்திகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

​மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த இந்நிகழ்வு மிகவும் பயனுள்ள முறையில் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.வரவிருக்கும் 5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களும் எவ்வித பயமுமின்றி, முழு நம்பிக்கையுடனும் திறமையுடனும் பரீட்சையை எதிர்கொண்டு சிறந்த சித்திகளைப் பெற கரவெட்டி பிரதேச செயலகம் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது

31samurtraining1 31samurtraining2 31samurtraining3 31samurtraining4

Scroll To Top