தேசிய-விளையாட்டு-தின-நிகழ்வு-2021
இலங்கையின் தேசிய விளையாட்டு தின பிரகடனப்படுத்தலை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021) காலை 8.30 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் தலைமையில் Covid-19 சுகாதார விதிமுறைகளிற்கமைவாக தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
![]() |
![]() |
![]() |
|
மாவட்ட செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த எமது பிரதேச செயலக பிரிவைச்சேர்ந்த கிராம அலுவலர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு மதிப்பிற்குரிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களால் நேற்றைய தினம் (04.03.2021) பி.ப 1.00 மணியளவில் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்கள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. செல்வராணி நிக்கலஸ் பிள்ளை மற்றும் சமூகப்பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் பதிவுகள் சில......



நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID -19 ) காரணமாக , வீட்டிற்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவதனால் கரவெட்டி பிரதேசத்தில் உணவுப்
![]() |
கரவெட்டி பிரதேச செயலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா எதிர்வரும் 2020.09.27 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு திரு.ஈ.தயாரூபன், பிரதேச செயலாளர் கரவெட்டி அவர்களின் தலைமையில் இமையாணன் மத்தி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.பா.முகுந்தன், பணிப்பாளர், விளையாட்டுத்திணைக்களம், வடமாகாணம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
|

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
அதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 0.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும் .எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம், யாழ்ப்பாணம் அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்.
1. சாவகச்சேரி - 0779231738
2. கைதடி - 0778205566
3. நல்லூர் - 0773446026
4. வேலணை - 0776628336
5. புங்குடுதீவு - 0776578125
6. தொல்புரம் - 0777647477
7. கீரிமலை - 0775841254
8. உடுவில் - 0774135082
9. புத்தூர் - 0703503909
10. உரும்பிராய் - 0779489650
11. புலோலி - 0774004554
12. அம்பன் - 0778075510
13. காரைநகர் - 0779055960
14. சண்டிலிப்பாய் - 0773688410
15. கரவெட்டி - 0779078020
16. மாவட்ட அலுவலகம் - 0703503900
.



















