"அகன்று செல்" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்வுகள் 10.03.2026 (செவ்வாய்க்கிழமை ) அன்று மாலை 3.00 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு செயற்திட்டமானது J/357 சமரபாகு கிராமத்திலும், அதனைத் தொடர்ந்து J/363 இராஜகிராமத்திலும் சிறப்பாக இடம்பெற்றது.இதன்போது "செம்முகம்" நாடகக் குழுவினரால் போதைப்பொருளின் அபாயங்கள் மற்றும் அதனால் குடும்ப வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையிலான வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதோடு போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைய சமுதாயத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்வு ப்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இமையாணன் கிராமத்தில், இமையாணன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் “இமையாணன் இதயம்” முப்பெரும் விழா 08.03.2026(ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வின் போது கிராமத்தின் நீண்டகால தேவையாக காணப்பட்ட தலைமைச்செயலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன், சங்கத்தின் ஓராண்டு சாதனைப் பயண நிறைவு நிகழ்வும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமும் ஒருங்கிணைந்து நடாத்தப்பட்டது.
முழுச் சமூகத்தையும் சீரழித்து வரும் நச்சுப் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், 'ரட்டம எகட்ட' (நாட்டிற்காக ஒன்றாக) தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பங்குனி முதலாந்திகதி ஆரம்பமான போதைப்பொருள் ஒழிப்பு வாரம் "விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரம் "எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஒரு அங்கமாக, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கரவெட்டி போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
விஷப் போதைப்பொருட்களால் ஏற்படும் அழிவுகரமான தாக்கங்கள் குறித்து சமூகத்திற்குத் தெளிவுபடுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் பாவனையின் அபாயங்கள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து விசேட கருத்தரங்குகள் நடாத்தப்பட்டதோடு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நேரடி விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.
තවත් කියවන්න: "ரட்டம எகட்ட" விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரம் - "அகன்று செல் "
கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், தொழில் கல்வி வழங்கும் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு (NVQ) செயற்திட்டம் . இச் செயற்திட்டமானது செவ்வாய்க்கிழமை( 24.02.2026) நெல்லியடி நகர் பகுதியில் நடைபெற்றது.
இச்செயற்திட்டத்தின் போது NVQ தகுதி முறையின் முக்கியத்துவம், பல்வேறு தொழில் துறைகளில் கிடைக்கும் பயிற்சிகள், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களின் பயன்கள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி தொழில் உலகில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (19.02.2026) இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், தலைமையக சமுர்த்தி முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், மாவட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு,நிதி மேலாண்மை: பிரிவு ரீதியான குழுச் சேமிப்பு, கடன் அறவீடு மற்றும் சேமிப்புத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த மீளாய்வு,வாழ்வாதார மேம்பாடு: புதிய தொழில் முயற்சியாளர்களை இனங்காணல் மற்றும் அவர்களுக்குத் தேவையான தொழில் பயிற்சிகளை வழங்குதல்,சமூக வலுவூட்டல்: மாதிரி கிராமங்களை அமைத்தல் மற்றும் பயனாளிகளின் பொருளாதாரத் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்து உரையாடப்பட்டதுடன் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, ஒரு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது












