கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் விவசாய அபிவிருத்தி தொடர்பான பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் புதன்கிழமை (17.02.2026) அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது எமது உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கௌரவ தவிசாளர் வடமராட்சி தெற்கு மேற்குபிரதேச சபை (கரவெட்டி) , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர்களுடன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய போதனாசிரியர் நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் ,பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ,அரசு கால்நடைத் திணைக்கள உத்தியோகத்தர் ,கிராம அலுவலர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புபட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .
තවත් කියවන්න: கரவெட்டி பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் - 17.02.2026
கரவெட்டி சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஆயுள்வேத அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (17.02.2026 ) அன்று கரவெட்டி மேற்கு J/363 பிரிவில் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் இலவச ஆயுள்வேத மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்து நடாத்தினர்.
இம்முகாமில் பொதுமக்களுக்கு தேவையான உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தொற்றா நோய்கள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், இலவச ஆயுள்வேத சிகிச்சைகள் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ சேவை ஆயுள்வேத வைத்தியர் திருமதி. த.கவிதா அவர்களினால் வழங்கப்பட்டது .
நெல்லியடி மற்றும் துன்னாலை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளின் புதிய கட்டடங்களின் திறப்பு விழாவும், கரவெட்டி சமுர்த்தி ஆரோக்கிய உணவகத்தின் திறப்பு விழாவும் இன்று (06.02.2026) வெள்ளிக்கிழமை கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரும்,கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ.ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (13.02.2026) அன்று கரவெட்டி பிரதேச செயலகம் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களும், உதவி பிரதேச செயலாளர் திரு. செல்வரட்னம் சாருதர்ஷன் அவர்களும் கலந்து கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
තවත් කියවන්න: கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கான கலந்துரையாடல்
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கரவெட்டி பிரதேச செயலகத்தில் 04.02.2026 அன்று காலை 8.04 மணிக்கு சுகந்திர தின நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் பயன்தரும் மரக்கன்று பிரதேச செயலாளர் அவர்களால் நாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரின் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வு தேசிய உணர்வோடு சிறப்பாக நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
තවත් කියවන්න: 78 வது சுதந்திர தினம் -"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்"












