வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல்,மனைப் பொருளியல் ,அழகுக்கலை டிப்ளோமா பயிற்சியாளர்களின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கல் நிகழ்வும் 28.01.2026 அன்று (புதன்கிழமை) உடுப்பிட்டி கலாச்சார மத்திய நிலையத்தில் திரு.சு.ரவிகரன் (கிராம அபிவிருத்தி அலுவலர், கரவெட்டி) அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தொழிற்கல்வி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழிற்கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 26.01.2026 அன்று( திங்கட்கிழமை) கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
Read more: தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கரவெட்டி பிரதேச செயலகத்தில் விதாதா வள நிலையத்தினால் சுயதொழில் முனைவோர்களை வலுவூட்டும் நோக்கில் கல்வி அறிவு தொடர்பான கருத்தரங்கு விதாதாவள நிலையத்தில் 09.01.2026 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந் நிகழ்வினை எமது உதவி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.செ.சாருதர்ஷன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக பிராந்திய மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர்களான திருமதி. பிரணவி யதுக்குலன் மற்றும் திருமதி. மாலினி அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு சரியான நிதி முகாமைத்துவத்தின் அத்தியாவசியம் பற்றியும், நிதி மோசடி நிறுவனங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் சிறந்த அறிவூட்டலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Read more: சுயதொழில் முனைவோர்களுக்கான நிதியியல் கல்வியறிவு தொடர்பான கருத்தரங்கு
கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக மதிப்பிற்குரிய திரு.செல்வரட்ணம் சாருதர்ஷன் அவர்கள் இன்று ( 05.01.2026) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்
Read more: உதவி பிரதேச செயலாளராக திரு.செல்வரட்ணம் சாருதர்ஷன் அவர்கள் கடமையேற்பு
இனிய புத்தாண்டினை வரவேற்று 2026 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வாக எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எமது நாட்டிற்காக தம் இன்னுயிரை நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து எமது நாட்டிற்கான சேவையினை அர்ப்பணிப்போடு திறன்பட செய்யும் முகமாக அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் எமது பிரதேச செயலாளரின் வாழ்த்துரைகளோடு அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றதனை தொடர்ந்து இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024ஆம் ஆண்டிற்கான குறித்த இலக்கை அடைந்தமைக்கான தேசிய மட்ட விருது நிகழ்வின் மெச்சுரை சான்றிதழ்களும் ,பதக்கங்களும் மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Read more: 2026 ஆம் ஆண்டிற்கான முதல் நாள் (01.01.2026) கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு












