நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கரவெட்டி பிரதேச செயலக சிறுவர் பிரிவினரால், உலக சிறுவர் தேசிய நிகழ்ச்சித்திட்ட Clean Srilanka தொடர்பான கருத்தமர்வானது 18.11.2025 அன்று கரவெட்டி மத்தி கவுந்தில் முன்பள்ளியில் J/367 கரவெட்டி மத்தி, J/368 கரவெட்டி கிழக்கு, J/369 கட்டைவேலி ஆகிய பிரிவு சிறுவர்களை இணைத்து நடாத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு கரவெட்டி பிரதேச செயலாளர் சார்பில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கலந்து நிகழ்வு தொடர்பான கருத்துரையினை முன்வைத்து, நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

எமது பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (14. 11. 2025) பிரதேச காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டமானது எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி.உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் இத்துறை சார்ந்த திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.இதில் வன,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விடுவிக்க வேண்டிய காணிகள் மற்றும் கிராம மட்ட காணி பயன்பாட்டு திட்டம் என்பன பற்றியும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புகள் திணைக்களத்தால், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் மாதிரி கிராம திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 04 துவிச்சக்கர வண்டிகள், மற்றும் 10 பாடசாலை பை, கற்றல் உபகரணங்கள் என்பன கரவெட்டி பிரதேச செயலாளர் ஊடாக 03.11.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் கிராமத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பயன்பாட்டினை கட்டுபடுத்தல் பற்றிய சிறுவர்களுக்கான முகாம் 12.11.2025 அன்று அல்வாய் கிழக்கு பிரிவில் நடைபெற்றது.இவ் செயற்பாட்டில் N.ஜெனோபா(சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) அவர்களும் R.நிமாலினி(இணைப்பாளர்,ப்ரண்ட்ஸ் நிறுவனம்) அவர்களும் K.கதிர்செல்வன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) அவர்களும் கலந்து கொண்டு சிறுவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வழங்கினார்கள். இவ் நிகழ்ச்சி திட்டத்திற்கு அனுசரணை, ஒழுங்கமைப்பு ப்ரண்ட்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் மாதிரி கிராம தெரிவில் உள்ள கரவெட்டி மேற்கு பிரிவில் ஸ்ரீ நாரத வித்தியாலய மண்டபத்தில் 10.11.2025 அன்று பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் வடக்கு மாகாண நன்னடத்தை திணைக்களம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் இணைந்து மேற்கொள்ளபட்டது.
இந் நிகழ்வானது கரவெட்டி பிரதேச செயலாளர் சார்பில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கிருஷ்ணாளினி நிரூபன் அவர்கள் தொடக்கவுரையை வழங்கி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கிராம மட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட நன்னடத்தை அலுவலர் திரு.வ.விக்னராஜா அவர்களும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரவெட்டி NCPA சிறுவர் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஜெனோபா அவர்களும், சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக கரவெட்டி நன்னடத்தை அலுவலர் திருமதி ச.அகிலா அவர்களும், போதைப்பொருள் பாவனை சார்ந்த விடயங்கள் தொடர்பாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திருமதி அ. சியாமினி அவர்களும் விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

Scroll To Top