வட மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண ரீதியான முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கிடையிலான திறனாய்வுப் போட்டியில் கரவெட்டி இமையாணன் மேற்கு பகல் பராமரிப்பு நிலையம் மாகாண ரீதியாக இரண்டாம் இடத்தையும் முதியோர் இல்லங்களுக்கிடையிலான போட்டியில் ஸ்ரீபரமானந்தா முதியோர் இல்லம் மாகாணத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமைக்கான விருதுகள் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மாகாண முதியோர் தின விழாவில் 17.10.2025 ஆம் திகதியன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Read more: மாகாண ரீதியான முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கிடையிலான திறனாய்வுப் போட்டி
கரவெட்டி பிரதேச செயலகபிரிவின் சிறந்த பெண்தொழில் முயற்சியாளர் திருமதி. இராஜேஸ்வரன் சுமதி அவர்களை அறிமுகம் செய்வதில் கரவெட்டி பிரதேச செயலகம் பெருமை கொள்கிறது.
2016 ம் ஆண்டு காலப்பகுதியில் J/369 கட்டைவேலி கிராம அலுவலர் பிரிவிற்கூடாக வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் பெற்று, பெண் தலைமை குடும்பமாக தனது குடும்ப வாழ்வாதாரம் என்ற சிந்தனைக்கு அப்பால் இன்று பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதுடன், NAITA, VTA போன்ற தொழில் கல்விநிறுவனங்களின் தையல் பயிலுனர்களுக்கு தனது நிலையத்தினூடாக பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.
தனது இத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு கரவெட்டி பிரதேச செயலாளர் மற்றும் கரவெட்டி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரின் தொடர்ச்சியான வலுவூட்டல் மற்றும் வழிகாட்டுதல்கள் காரணமாக அமைந்ததாக நன்றியுடன் தெரிவித்துக்கொண்டார்.
Read more: கரவெட்டி பிரதேச செயலக பிரிவின் சிறு தொழில் முயற்சியாளரின் ஊக்கமும் அதன் வளர்ச்சியும்..
மாவட்ட மட்ட முதியோர் தின விழாவானது புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலத்தில் 14.10.2025 ஆம் திகதியன்று யாழ் மாவட்ட சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சு.வரதபாஸ்கரன் தலைமையில் நடாத்தப்பட்டது.
Read more: மாவட்ட மட்ட முதியோர் விளையாட்டுப் போட்டியும் சர்வதேச முதியோர் தின விழாவும் - 2025
இவ் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் கரவெட்டிபிரதேசசெயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது 2025.10.14 தினத்தன்று Tilko Jaffna City Hotel இல் நடைபெற்றது.இந் நிகழ்வில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறன் நபர்களை கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டன.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் தீபாவளியை முன்னிட்டு பிரதேச செயலாளர் தலைமையில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இன்று 13.10.2025 விற்பனை கண்காட்சி இடம் பெற்றது.
இதில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தியினை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.இவ் விற்பனை கண்காட்சியானது சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினாரால் ஏற்பாடு செய்யப்பட்டது.












