Related Links
Home
WBB Announcement
பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
நலன்புரி நன்மைகள் (Aswasuma) கொடுப்பனவிற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. ஏற்கனவே நலன்புரி கொடுப்பனவிற்கு (Phase I & Ii) விண்ணப்பிக்காதவராக இருக்கவேண்டும்.
2. புதிய குடும்பமாயின் (Extended family) ஏற்கனவே விண்ணப்பித்த குடும்பத்தின் உறுப்பினரல்லாதவராக இருத்தல்.
3. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வயதெல்லையினருக்கு NIC இருத்தல் கட்டாயம்
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்கும் மேற்படி தகமையுடையோர் அஸ்வசும கட்டம் இரண்டிற்கான விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி பிரதேச செயலகத்தில் உள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் (WBIU) எதிர்வரும் 02.12.2024 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பு:- விண்ணப்பப் படிவங்களை நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நெல்லியடி பேருந்து தரிப்பிடத்தில் பிரதேச செயலகத்தால் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றதன் பதிவுகள் சில
Read more: பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
உண்டியல் சேமிப்பு நிகழ்வு -2024
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 31.05.2024 இன்று சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உண்டியல் சேமிப்பு நிகழ்வு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரத்ததான நிகழ்வு -20.04.2024
யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கீழ் கரவெட்டி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிசங்கத்தினால் இன்று (20.04.2024) நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வின் பதிவுகள்.......



























